கூகுளுக்கு போட்டியாக புது பிரௌசர்!! மத்திய அரசு அதிரடி!!

 
கூகுள் பிரௌசர்

உலகம் முழுவதும் இணையச் சந்தையை பொருத்தமட்டில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரௌசர்    கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் வகைகள் தான்.இவை   அமெரிக்க  நிறுவனங்கள். இதில் இந்தியாவில் கூகுள் குரோம் சுமார் 850 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய இணையச் சந்தையை கூகுள், தன் வசம் வைத்துள்ளது.  இந்திய மக்களில் சுமார் 88.47 % பேர் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர். 
அடுத்த இடத்தில்   சஃபாரி பிரௌசர் -  5.22 %
3 வது இடத்தில் மைக்ரோசாப்ட் எட்ஜ் - 2% 
4 வது இடத்தில் சாம்சங் இன்டர்நெட்  -1.5 % 
5 வது இடத்தில் மொஸில்லா பயர்பாக்ஸ் - 1.28%
மற்றவை -1.53 %  இந்திய சந்தையில் இடம் பிடித்துள்ளன. 

கூகுள் பிரௌசர்
இவை அனைத்துமே   வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதால் இந்தியாவின்  பாதுகாப்புக்கு உள்நாட்டு பிரவுசர்களே பாதுகாப்பானவை. இதன் அடிப்படையில்  "ஆத்மநிர்பர்தா" திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பிரவுசர்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக   3 கோடிக்கும் அதிகமாக மானியம் தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த புதிய பிரவுசர் தயாரிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதற்கு  தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.  இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் " உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் பயணிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு நமது டிஜிட்டல் விதியின் மீது நம்முடைய அரசுதான் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.  இந்தியாவின் பாதுகாப்பான  டிஜிட்டல் சேவைகளுக்கு வெளிநாடுகளின் பிரவுசர்களை சார்ந்திருக்க விரும்பவில்லை.   எனவே தான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக நாம் தேடும் சர்ச் என்ஜின் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்”  எனத் தெரிவித்துள்ளது. 

கூகுள் போட்டி
உள்நாட்டு இண்டர்நெட் பிரவுசர் மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து 2024 ம் ஆண்டின் இறுதிக்குள்   பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்காக உள்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரவுசரை உருவாக்குவது மற்றும் அதனை சரியான முறையில் செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது. புதிய பிரவுசர்கள் இப்போதுள்ள நவீனமான தொழில் நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும், இந்திய மொழிகளில் செயல்பட வேண்டும் என  மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web