தமிழகம் முழுவதும் புதிய மின்மீட்டர்கள்... மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!

 
மின்சாரம்

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில்  தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவின் முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் தானாகவே குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு மின்சார பயன்பாட்டை தெளிவாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின்சாரம் eb

இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்புக்காக முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்களை பொருத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் தானாகவே குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு மின்சார பயன்பாட்டை தெளிவாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்  மீட்டர்களை தமிழகம் முழுவதும் பொருத்துமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர்கான டெண்டர் சென்ற ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற நிலையில் இதுவரை யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை.

மின்சாரம்

இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு அதிகம் செயல்படுத்தப்பட்ட  மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 12 வது இடத்தில் உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் பீஹார், அஸ்ஸாம், ஹரியானா  மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் 1.55 லட்சம் மின் மீட்டர்களை பழுதாகி இருப்பதாகவும், இதனை சரி செய்யும் பணியில் மின்சார துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,217 மீட்டர்களும், 6606 மீட்டர்களும் பழுதாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

From around the web