LPG, PNG விதிகளில் முக்கிய மாற்றம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

 
எல்பிஜி, பிஎன்ஜி  சிலிண்டர்

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் மற்றும் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாடு தொடர்பாக மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் புதிய கட்டுப்பாடுகளையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள், பயன்பாட்டில் உள்ள எல்பிஜி இணைப்பைத் திரும்ப ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பிஎன்ஜி வசதி இல்லாத இடங்களுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டால், மீண்டும் எல்பிஜி இணைப்பைப் பெறத் ஏதுவாக 'டிரான்ஸ்ஃபர் வவுச்சர்' வசதியும் வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் இரு வேறு எல்பிஜி இணைப்புகள் வைத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சிலிண்டர்

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டைக் எளிதாக்கும் வகையில் 10 கிலோ எடை கொண்ட சிறிய ஃபைபர் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உணவு விநியோகச் செயலியான ஸ்விகி மூலமாகவும் இவற்றை ஆர்டர் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் குழாய் வழி எரிவாயு PNG

புதிய எரிவாயு இணைப்புகளை விரைவாகப் பெற 'லைட் ஜிப்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எரிவாயு உருளைகள் விநியோகத்தின் போது முறைகேடுகளைத் தடுக்க ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.