ஆசிரியர்களுக்குப் புதிய கௌரவம் - இனி பெயருக்கு முன் ‘Tr’ குறியீடு சேர்க்கப்படும் என அறிவிப்பு!
Sep 7, 2026, 07:25 IST
சமூகத்திற்கு ஆசிரியர்கள் வழங்கும் மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், கர்நாடகத்தில் ஆசிரியர்களின் பெயருக்கு முன் ‘Tr’ குறியீட்டைச் சேர்த்துக் கொள்ளலாம் எனப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, கர்நாடக ஆசிரியர்கள் இனி தங்கள் பெயருக்கு முன்பு ஆங்கிலத்தில் Teacher என்பதைக் குறிக்கும் ‘Tr’ என்ற குறியீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவத் துறையில் பயன்படும் 'Dr' (டாக்டர்), பொறியியல் துறையின் 'Er' (பொறியாளர்) மற்றும் 'Prof' (பேராசிரியர்) போன்ற புகழ்பெற்ற குறியீடுகளுக்கு இணையாக இனி ஆசிரியர்களுக்கான ‘Tr’ குறியீடும் அதிகாரப்பூர்வ அந்தஸ்தைப் பெறுகிறது.
