எனக்கு ஏதோ ஃபீலிங் இருக்கு... பிக் பாசில் புது காதல் ஜோடி... !!

 
பிக்பாஸ் 7

 
 பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 1 ம்தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.  பிக்பாஸ் சீசன் 6 ஐ காட்டிலும் சீசன் 7ல்  பரபரப்புகளுக்கும்,  சண்டை - சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லை.   பூர்ணிமா ரவி மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை  என்கின்றனர் நெட்டிசன்கள்.   அந்த வகையில் இன்று வெளியான  புரோமோவில், தினேஷ், நிக்சன், பிராவோ    ஆலோசனை செய்து மணிக்கு ஸ்டார் வழங்கியுள்ளனர். இதனால்  மாயாவும்  பூர்ணிமாவும் செம கடுப்பாகினர்.  டைட்டில் வின்னர் விக்ரம் மற்றும் விஷ்ணுவுக்கு அந்த ஸ்டார் வழங்கப்படவில்லை என்றனர்.   மற்றொரு புரோமோவில்  விஷ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் பேசி கொண்டிருக்கும் காட்சி காட்டப்படுகிறது.

பிக்பாஸ் 7


 அதில் விஷ்ணு என்னை ஒரு பெண்ணுடன் கம்பேர் செய்தால்  அதைப்பற்றி எல்லாம் கவலையே படமாட்டேன்.  எந்த பொண்ணை காட்டினாலும் எங்க வீட்டில உடனே கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இப்போதிக்கு சிங்கிள் தான்.  அதுக்காக அவர் சொன்ன மாதிரி  பொறுக்கி தனமா சுத்திகிட்டு இருக்க மாட்டேன் என்கிறார். பூர்ணிமா நீ யார் தான் என கேட்க, அதற்கு விஷ்ணு  பூர்ணிமா இப்போ ஒரு விஷயம் பண்றீங்க இல்ல அப்படி இருந்தால் எனக்கு பிடிச்சுருக்கு என சொல்கிறார்.

பிக்பாஸ்7

இதை தொடர்ந்து, நான் ஓப்பனா சொல்லட்டா... ஏதோ எனக்கு ஒரு பீலிங் இருக்கு. நான் எனக்கு தோன்றுவதை சொல்கிறேன். உங்களுக்கு இருந்தா ஓகே சொல்லலாம் இல்லனா... பிடிக்கலைனா இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிடலாம் என்கிறார். இதற்கு விஷ்ணு நான் எதுவுமே சொல்லலையே என்கிறார். பூர்ணிமா ஓப்பனாக தன்னுடைய ஃபீலிங்கை வெளிப்படுத்தியுள்ள நிலையில் பிக்பாசில் அடுத்த காதல் ஜோடி  உருவாகி இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web