புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Oct 23, 2026, 07:32 IST
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகவுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கும் மற்றும் மீனவர்களும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
