புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் நிறுத்தம்... இல்லத்தரசிகள் கடும் அவதி!

 
சிலிண்டர்

 

சர்வதேச சூழலால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, மத்திய அரசு புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதை நிறுத்திவைத்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மானியம் இல்லாத வணிக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்க நேரிடுவதுடன், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க எரிவாயு இணைப்பு ரசீது கட்டாயம் என்பதால் புதிய குடும்ப அட்டை பெற முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்தச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அன்றாட சமையல் பணிகளை மேற்கொள்வதிலும், குடும்பத்தை நடத்துவதிலும் பொதுமக்களுக்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் புதிதாகக் குடியேறும் மக்களும் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LPG New Rules Kick In From Today: No Dual Gas, OTP Delivery, Revised Prices

பொதுமக்களின் இந்தத் துயரத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.