ஏப்ரல் 1 முதல் பென்ஷன் வாங்குபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 
என்பிஎஸ்

 ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய ஓய்வூதிய அமைப்பில்   புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் உள்நுழைய  புதிய பாதுகாப்பு விதியை வகுத்துள்ளது.  இந்த விதி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து பயனர்களும் என்.பி.எஸ். தளத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில் தான் லாக்-இன் செய்ய முடியும். இதனை மீறுபவர்கள் உள்நுழைவதை தடுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பென்ஷன் மூத்தகுடிமக்கள்

இதனால்  என்பிஎஸ் தளத்தில் மேற்கொள்ள பரிவர்த்தனைகள் கூடுதல் பாதுகாப்பை பெறும் .  அதே போல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன்  பான் கார்டு, ஃபாஸ்டாக்  சேவைகளுக்கும் இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.   ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசமும் மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும்  இனி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க ரூ.1,000 அபராதத் தொகையுடன் இணைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பென்ஷன்


அதே போல் பல வாகனங்களுக்கு ஒரே FASTag ஐ பயன்படுத்துவது, ஒரு வாகனத்துக்கு பல FASTag களை இணைப்பது போன்ற முறைகேடுகளை இதன் மூலம் தடுக்கலாம்.  இதேபோல ஜிமெயில் சேவையிலும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஈமெயில்களை அனுப்புபவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சப் டொமைன்களில் இருந்து அனுப்பும் ஈமெயில்களும் மெயின் டொமைன் அடிப்படையில் கணக்கிடப்பட்டும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web