தெருநாய்களுக்கு உணவளிக்க தடை - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 
நாய் நாய்கள் தெருநாய்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும், சாலையோரங்களில் நாய்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடுப்பதற்காகவும் மாநகராட்சிப் பகுதியில் 36 பிரத்யேக இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நாய் தெருநாய் வெறிநாய்

பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க விரும்பினால், மாநகராட்சியால் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த 36 குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒதுக்கப்பட்ட இடங்களின் விரிவான பட்டியலைத் தூத்துக்குடி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 3,163 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 408 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இதுதொடர்பான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

தெருநாய் நாய்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெருநாய்கள் அல்லது அது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, மாநகராட்சியின் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணான 1800 203 0401-ஐத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.