புதிய கட்டுப்பாடுகள்: சதுரகிரி மலையேறிச் சென்று தரிசிக்க இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி!
தேனி மாவட்டம் உப்புத்துறை பழைய கருப்பசாமி கோயில் வனப்பாதை வழியாகச் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
தீப்பெட்டி, கற்பூரம், கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சதுரகிரிக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் வனத்துறை வகுத்துள்ள இந்த நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
