நாடு முழுவதும் புதிய விதிமுறை அமல்... சோப்பு, ஷாம்பு போன்ற பராமரிப்புப் பொருட்களில் சைவ, அசைவ முத்திரைக் கட்டாயம்!

 
ஷாப்பிங் கடை அங்காடி பல்பொருள்  மால்

மத்திய அரசின் லீகல் மெட்ராலஜி (பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்) திருத்த விதிகளின்படி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய நடைமுறை, நுகர்வோர் தாங்கள் வாங்கும் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் எவற்றால் தயாரிக்கப்பட்டன என்பதை எளிதில் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

முழுமையாகத் தாவர அடிப்படையிலான அல்லது சைவப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளின் பாக்கெட்டுகள் அல்லது கவர்கள் மீது பச்சை நிறப் புள்ளி இடம்பெறும்.

கடை

விலங்கு மூலப் பொருட்களைக் கொண்ட அல்லது அசைவப் பொருட்களால்  தயாரிக்கப்பட்ட தனிநபர் பராமரிப்புப் பொருட்களுக்குச் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீடுகள் நுகர்வோர் எளிதில் பார்க்கும் வகையில் பாக்கெட்டின் முதன்மைப் காட்சிப் பகுதியின் மேற்பகுதியில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள்  மற்றும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் இந்த விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்களில் வழக்கமாக இருக்கும் இத்தகைய குறியீடுகள், இனி நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள குளியலறை மற்றும் அழகுசாதனப் பொருட்களிலும் இடம்பெறுவது நுகர்வோருக்குத் தேவையான விழிப்புணர்வை உடனுக்குடன் வழங்க வழிவகுக்கும்.