தமிழ் நடிகர்களுக்கு புது ரூல்ஸ்!! பெப்சி அதிரடி!!

 
fepsi

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அனைத்து படங்களிலும்  FEFSI அமைப்பை சேர்ந்து ஊழியர்கள் தான் பணியாற்ற முடியும். இவர்கள் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பில் இருப்பவர்கள். தமிழகத்தில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும்   இந்த FEFSI அமைப்பை சேர்ந்த ஊழியர்கள்தான் பணியாற்றுவார்கள்,தற்போதைய படங்களை பொறுத்தவரை பல படங்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் தான் படப்பிடிப்புக்கள் நடத்தப்படுகின்றன.

FEFSI - Film employee's federation of south India new rules


1. For Tamil films only Tamil artists should be employed.

2. Shooting of films should happen only in Tamil Nadu.

3. Shoot should not take place in outside state or outside country without utmost necessity.

4. If… pic.twitter.com/Drno33OSX5

— Manobala Vijayabalan (@ManobalaV) July 20, 2023

தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படும் படங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன. இதனால் FEFSI அமைப்பை நம்பி இருக்கும் இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில்  FEFSI அமைப்பு தற்போது அதிரடியாக ரூல்ஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
kollywood
அதன்படி 
 தமிழ் படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் . 
இவர்கள் வேறு மொழிகளில் நடிப்பதால் மற்ற மொழி நடிகர்கள் தமிழுக்கு வருகின்றனர். இதனால் தமிழ் நடிகர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது.  
 தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கவேண்டும்  
தகுந்த காரணங்களுக்காக  மட்டுமே வெளிநாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ படப்பிடிப்பை நடத்த வேண்டும்  
நான்காவதாக, குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியோ அல்லது குறிப்பிட்ட காலத்தை விட அதிகமான நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலோ எழுத்துபூர்வமான விளக்கத்தை தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும் 
இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என   FEFSI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் உத்தரவு நடிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web