பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்... விரைவில் வெளியாக இருக்கும் அதிரடி அறிவிப்பு!
சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, புதிய தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கோயம்பேடு, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், நந்தம்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்தன.

இதில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டலாம் என்ற ஆலோசனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொருபுறம் ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இடமாற்றம் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விஜய்யின் கடக ராசியின்படி, நீருக்கு அருகில் இருந்தால் பலம் கூடும் என்பதால், மெரினா கடற்கரைக்கு அருகிலேயே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
