வஉசி துறைமுகத்தில் புதிய கப்பல் சேவை தொடக்கம் - சீனா, வியட்நாம் நாடுகளுடன் வர்த்தகம் வலுப்பெறுகிறது!

 
வஉசி துறைமுகம் தூத்துக்குடி

சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனான கடல்சார் வர்த்தக இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் எம்.வி. நவாடா பூம் என்ற புதிய கப்பல் சேவை முறைப்படியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் ஏற்றுமதி இறக்குமதி

இந்தப் புதிய கப்பல் சேவையின் தொடக்கத்தின் மூலம் பிராந்திய அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாய்ப்புகள் கணிசமாக விரிவடைவதோடு, சர்வதேச சரக்கு போக்குவரத்தும் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார். இதன் வழியாக வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகள் மேலும் எளிமையாக்கப்பட்டு, உள்ளூர் வர்த்தகர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.