"புதிய புயல் சின்னம்.. உடனே கரைக்கு திரும்புங்க..” - மீனவர்களுக்கு அவரச எச்சரிக்கை!"

 
புயல் கரைக்கு மீனவர்கள்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறு மீன்வளத் துறை மற்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது நவம்பர் 14-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக மேலும் தீவிரமடைந்து தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

புயல் உருவாகும் அபாயம் காரணமாகக் ஆழ்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தீவிரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் வரும் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் தவறாமல் காசிமேடு துறைமுகத்திற்கு வந்து சேர வேண்டும் எனக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் இலங்கை சிறைபிடிப்பு

அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கையையும் மீறிக் கடலிலேயே தங்கும் படகுகள் மற்றும் மீனவர்கள் மீது சட்டப்பூர்வமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.