பாலகிருஷ்ணன் மரண வழக்கில் புதிய திருப்பம்: ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்!

 
செக்காணூரணி

 

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக, தேவாரம்  அருகே அவரது நண்பர்களின் தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 31 ஏலக்காய் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் காவலில் இருந்தபோது இறந்து கிடந்தார் - தி இந்து

முன்னதாக தீ விபத்தில் 67 மூட்டை ஏலக்காய்கள் எரிந்துவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவாரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணனின் நண்பர்கள் அன்பரசன் மற்றும் அருண் ஆகியோரின் தோட்டத்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 ஏலக்காய் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. எரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட மூட்டைகளின் மீதமுள்ள பகுதி இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.