நாடு முழுவதும் நாளை முதல் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு புதிய அப்டேட்!
Aug 31, 2024, 09:13 IST
நாளை செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் இந்த முக்கிய விதிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க. கிரெடிட் கார்டுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவத்தனைகள் செய்து கொள்வது தான் தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் யுபிஐ ஆப்களில் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்து விட்டால் போதும் டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதனால் கையில் உங்கள் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்நிலையில் வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் அளவுக்கு இணையான ரிவார்டு பாயிண்டுகளை ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய கொடுப்பனவு கழகம் தற்போது பிறப்பித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யூபிஐ மூலமாக பணம் செலுத்த முடியும்.
ஆனால் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய வெகுமதிகள் மற்ற கார்டுகளை விட மிகவும் குறைவானவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது NPCI இன் உத்தரவின்படி இந்த புதிய விதிகள் நாளை செப்டம்பர் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
From
around the
web