பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு புதிய பணி நேரம் மற்றும் விடுமுறை மாற்றங்கள் அறிவிப்பு!

 
தலைமை செயலகம் அரசு  ஊழியர்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதை ஒட்டி, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட அலுவலகப் பணியாளர்களின் பணி நேரத்தில் மாற்றங்கள் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரை (ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தினமும் காலை 9 மணிக்கே அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும். தினசரி அலுவலக நேரம் முடிந்த பிறகும், உயர் அலுவலர்களின் உரிய அனுமதி பெற்ற பின்னரே பணியாளர்கள் அலுவலகத்தை விட்டுச் செல்ல வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை

விடுமுறை நாட்களிலும்கூட சுழற்சி முறையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க முதன்மை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பணியாளர்கள் தலைமையகத்தை விட்டுச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் வினாக்கள், வெட்டுத் தீர்மானங்கள் மற்றும் கேள்விகளுக்கு உடனுக்குடன் விரிவான பதில்களைத் தயாரித்துச் சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைப்பதற்காகவே இந்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.