பிறந்த சில மணி நேரத்திலேயே செம ‘கூல்’ போஸ்! வைரலாகும் பச்சிளம் குழந்தை வீடியோ!
பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை, பெரியவர்கள் ஓய்வெடுப்பதுபோல் மிகவும் இயல்பாகப் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் குழந்தைகள் நல மருத்துவரும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை நிபுணருமான டாக்டர் இஸ்லாம் எல்தே இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மருத்துவப் பரிசோதனையின்போது, குழந்தை தனது இரு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு, ஒரு காலின் மீது மற்றொரு காலை போட்டபடி அமைதியாகப் படுத்திருந்தது.
குழந்தையின் இந்த வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து இணையவாசிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். சிலர், பிறந்த உடனேயே குழந்தை வாழ்க்கையை நிம்மதியாக எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டதாக நகைச்சுவையாகக் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், குழந்தையின் ஒரு குறிப்பிட்ட உடல் அசைவைக் கொண்டு அதன் உணர்வுகளைத் தீர்மானிக்க முடியாது.
