திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து பெற்ற புதுமண தம்பதி.. ஷாக் பின்னணி!

 
இஸ்லாம் திருமணம்

குவைத்தில் ஒரு ஜோடிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அனைத்து எதிர்பார்ப்புகளுடன் திருமணம் முடிந்து, திருமண நிகழ்ச்சி முடிந்து இருவரும் கிளம்பத் தயாரானார்கள். அப்போது, ​​படிக்கட்டில் நடந்து சென்ற மணப்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது, ​​மணமகன் கையைப்பிடிப்பதற்குப் பதிலாக, மணப்பெண்ணை அனைவரின் முன்னிலையிலும், 'முட்டாள், கீழே பார்த்து நடக்கமாட்டியா?' என கடிந்துக்கொண்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார். 

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, மரியாதை இல்லாத கணவர், எதிர்காலத்தில் என்ன செய்வார் என்று யோசித்து, உடனடியாக நீதிபதியை அணுகி விவாகரத்து கேட்டார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் விவாகரத்து வழங்கி, திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் திருமண வாழ்க்கை முறிந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.'மரியாதை இல்லாத உறவுகள் ஆரம்பத்திலேயே முறிந்துவிடும்' என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோல், 2004-ம் ஆண்டு பிரிட்டனில் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி வெறும் 90 நிமிடங்களில் விவாகரத்து பெற்றது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web