வெளியே வராதீங்க... தொடர்ந்து சதமடிக்கும் வெயில்... அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்!

 
வெயில்

அவசியமில்லாமல் மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்க. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் அளவு சதத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. வெயில் காலங்களில் உங்கள் குழந்தைகளும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதிபடுத்திக் கொள்ளுங்க. பருத்தியினால் ஆன ஆடைகளையே அணியுங்கள்.

வெப்ப அலை

தொடரும் வெயில் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர் , தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியும் வெயில் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுளது.  திருச்சி, திருத்தணி மற்றும் வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. மதுரையில் 103 டிகிரி வெயிலில் மக்கள் பகல் நேரத்தில் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். கோவை மக்களும் வெயில் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. கோவையிலும் 103 டிகிரி பதிவாகி இருக்கிறது. தஞ்சையில் 100.4 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், இந்த வெயில் அடுத்த 5 நாட்களுக்கும் தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெயில்


தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 106 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சியளித்துள்ளது. அடுத்து வரும் 5 நாட்களுக்கு இயல்பை விட  2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

From around the web