பிரதமர் மோடி பேசியபோது "Next PM விஜய்" என கெத்து காட்டிய தவெகவினர்!
சென்னை ஐஐடியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் "Next PM விஜய்" மற்றும் "Today CM, Tomorrow PM" என்று எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்திப் பிடித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்றனர். விஜய் முதல்வரான பிறகு மோடியுடன் அவர் கலந்துகொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அரசு விழா இதுவாகும்.

விழா மேடையில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த 5 தவெகவினர் திடீரென எழுந்து நின்று, விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய "NEXT PM விஜய்", "TODAY CM, TOMORROW PM" ஆங்கில வாசகங்கள் அடங்கிய சிறு அட்டைகளைக் காட்டியுள்ளனர். உடனடியாக உஷாரான எஸ்பிஜி பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறினரும் அவர்களை உடனே அமருமாறு எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அமர்ந்தனர்.
ஏற்கனவே விமான நிலையத்தில் முதல்வர் விஜய் கருப்புச் சட்டையில் வந்து வரவேற்றது விவாதப் பொருளான நிலையில், தற்போது பிரதமர் கலந்துகொண்ட அரசு விழாவிலேயே தவெகவினர் இதுபோன்ற பதாகைகளைக் காட்டியது பாஜக தரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு விழாவைத் தவெகவினர் கட்சி மேடையாக மாற்றுவது Protokol விதிமீறல் என்று பாஜகவினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், "இது தொண்டர்களின் தூய அன்பின் வெளிப்பாடு; எங்கள் தலைவர் இன்று முதல்வர், நாளை நாட்டின் பிரதமர் என்பது எங்களின் லட்சியக் கனவு" என்று தவெக தொண்டர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தத்தில், இன்றைய சென்னை விழாவில் அறிவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை விட, தவெகவினரின் இந்த அதிரடிப் பதாகை செயல்பாடுதான் அரசியல் அரங்கில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
