சுங்கச்சாவடி கழிப்பறை குறித்துப் புகாரளித்தால் ரூ.1,000 ஃபாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம் - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிரடித் திட்டம்!
Sep 10, 2026, 06:10 IST
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் தூய்மையைப் பேணவும், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் 'கிளீன் டாய்லெட் பிக்சர் சேலஞ்ச்' என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தாலோ அல்லது முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ, பயணிகள் அதனைப் புகைப்படம் எடுத்துப் புகாரளிக்கலாம். அப்படிச் செய்யும் பயணிகளுக்குப் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள இலவச ஃபாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படுகிறது.

பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டம், வரும் ஜூன், 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு, இலவச ஃபாஸ்டேக் ரீசார்ஜ் பரிசையும் எளிதில் வெல்ல முடியும்.
