தமிழகத்தில் திருச்சி, விருதுநகரில் என்.ஐ.ஏ திடீர் சோதனை!

 
என்ஐஏ என்ஐஏ

தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் திடீர் அதிரடிச் சோதனை ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதலே திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சில முக்கியப் பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து இந்த அதிரடி சோதனையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

பொதுவாகப் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோதச் செயல்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள், இந்தத் திடீர் சோதனையின் நோக்கம் மற்றும் வழக்கு விபரங்களை மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.

என்ஐஏ

அண்டை மாநிலமான கேரளாவில் அண்மையில் பதியப்பட்ட மாவோயிஸ்ட் நடமாட்டம் அல்லது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் நெட்வொர்க் தொடர்பான வழக்குகளின் நீட்சியாக இந்தச் சோதனை தமிழகத்தில் நடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும், இந்தச் சோதனை எதற்காக நடத்தப்படுகிறது, யாருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களை இலக்கு வைத்து அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர் என்ற எவ்வித அதிகாரப்பூர்வ விபரங்களையும் அதிகாரிகள் தற்பொழுது வரை வெளியிடவில்லை.

இன்று காலை சரியாக 6 மணி அளவில் தங்களது சோதனையைத் தொடங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள், தற்பொழுது மதியைக் கடந்தும் பல மணி நேரமாகத் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நீட்டித்து வருகின்றனர்.

என்ஐஏ

தற்போதைய சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகுதான், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள், டைரிகள், செல்போன்கள் மற்றும் இது எந்தத் குறிப்பிட்ட வழக்கு தொடரானது என்பது பற்றிய முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஊடகங்களுக்கு முறைப்படி வெளியிடப்படும் என்று என்.ஐ.ஏ உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஜூன் 1 அன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது முதல் மாவட்டப் பயணமாகத் திருச்சிக்கு வரவுள்ள நிலையில், திருச்சியிலேயே இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாமிட்டு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருவது, அரசியல் வட்டாரங்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்புத் துறையினர் மத்தியிலும் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.