பெரும் பரபரப்பு... தமிழகம் முழுவதும் 20 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு!

 
கேரளாவில் 2 பெண்களை கைது செய்தது என்.ஐ.ஏ. கேரளாவில் 2 பெண்களை கைது செய்தது என்.ஐ.ஏ.


 தமிழகத்தில் சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் இந்த  சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  திருமலைவாசலில் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரத்தில் தொடங்கிய ரெய்டு நடவடிக்கையால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உதவியாக தமிழக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம்.  இவர்கள் ஆயுதம் தாங்கிய குழுவாக பல்வேறு நாடுகளில்  குறிப்பாக சிரியா, ஈராக், மத்திய கிழக்காசியா, தெற்காசியா நாடுகளில் உள்ளனர். சில நாடுகளில் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் மறைமுகமாக ஆட்களை திரட்டி வருவதாக புகார்கள் வந்த எழுந்த வண்ணம் உள்ளன.

என்ஐஏ


இதன் அடிப்படையில்  பல்வேறு சமயங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஐ.எஸ் தொடர்பான குறிப்பேடுகள், தகவல் தொடர்பு பரிமாற்றங்கள்  லேப்டாப், ஹார்ட் டிஸ்க், மொபைல் போன், சிம் கார்டு   பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவர்கள்  ஐ.எஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.  இவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள்  சேகரித்து வருவது, அதற்கான நிதி பெறும் முயற்சியில் ஈடுபடுவது, பயங்கரவாதிகளை தப்பிக்க வைக்க உதவுவது என இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து புகார்கள் வருகின்றன 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!