நைஜீரியாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி... 3வது முறையாக பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து... 18 பேர் பலி!

 
நைஜீரியா பெட்ரோல்

பெட்ரோல் டேங்கர் வெடித்த விபத்தில் 98 பேர் உயிரிழந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலை. அதற்குள் நைஜீரியாவில் மீண்டும் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்த டேங்கர் லாரி இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால்  டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும்  விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

நைஜீரியா பெட்ரோல்

இச்சம்பவம் குறித்து  அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நைஜீரியாவின் நிஜர் மாகாணத்தில் இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறி 98 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

 

From around the web