துப்பாக்கி சுடுதல் போட்டி.. தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் தங்கம் வென்று அசத்தல்..!!

 
நிலா ராஜா பாலு

இந்திய தலைநகர் டெல்லியில் நடைப்பெற்று வரும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு  தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இதுக்குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் (டிவிட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 


என் மகள் #NilaaRajaaபாலு 66வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தனிநபர் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்காக ஜூனியர் மகளிர் தேசிய தங்கத்தை வென்ற இளைய துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர், இப்போது தனது மாநிலத்திற்காக தொடர்ந்து இரண்டு தங்கம் வென்ற இளையவர் ஆவார்.இது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Image

இந்நிலையில் அமைச்சரின் மகள் சாதனைக்கு அரசியல் சார்பிலும் விளையாட்டு துறை சார்பிலும் பாரட்டுகள் குவிந்து வருகின்றது.

From around the web