நீலகிரியில் கனமழை: 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 
கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார்.

மழை விடுமுறை

இதன்படி, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.