கோயிலுக்கு சென்ற 9 பக்தர்கள் பலி... லாரி மீது வேன் மோதியதில் விபரீதம்!

 
லாரி

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பிரபலமான காது ஷியாம் கோயிலுக்குச் சென்றுவிட்டு வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

சம்புபுரா அருகே நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, அங்குப் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் அதிவேகமாக மோதியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரி நின்றிருந்ததை வேன் ஓட்டுநர் கவனிக்கத் தவறியதே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

விபத்து

இந்தக் கோர மோதலில் வேனில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.