உஷார் மக்களே... மத்திய அமைச்சர் மனைவி டெங்குவால் பலி... !

 
ஜூவல்
 இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலத்திற்கு முன்பே மழைக்கால நோய்கள் வரிசைக்கட்டி வர ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்து பருவகால நோய்களில் இருந்து தப்பிக்க வழிகாட்டி நெறிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

 பிலிப்பைன்ஸ் டெங்கு
இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த ஒன்பது நாள்களுக்கு முன்னர் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

ஜூவல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூவல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

அதே மருத்துவமனையில் ஜூவல் ஓரமும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஜூவல் ஓரம் - ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அமைச்சரின் மனைவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!