என்கிட்ட பணம் இல்ல ... தேர்தலில் போட்டியிட மறுத்த நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தமிழகம் , புதுச்சேரியில் நேற்றுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று 12 மாநிலங்களுக்கான 2ம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. பாஜகவை பொறுத்த வரை மக்கள் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என புத்தம் புது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழிசை சௌந்திரராஜன் கூட தனது ஆளுனர் பதவியை துறந்து விட்டு தேர்தலில் இணைந்துள்ளார். தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், "பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது... எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்து பார்த்தேன்... இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை . நான் போட்டியிடவில்லை என தலைமையிடம் தெரிவித்து விட்டேன்."எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!