பட்ஜெட் 2025 ... கரியால் வரையப்பட்ட நிர்மலா சீதாராமன் ஓவியம்!
இந்தியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து 8வது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் வசித்து வரும் ஓவியக் கலைஞர் நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டை குறிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8 அடி உயர உருவப்படத்தை க்ராஃபைட் கரியைக் கொண்டு வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அந்த ஓவியத்தை வரைந்த கலைஞர் ஜுஹைப் கான் இந்த ஓவியத்தின் மூலமாக 2025-2026 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் மீதான தனது எதிர்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளேன். இந்த பட்ஜெட்டினால் இந்திய ரூபாயின் மதிப்பு பலமடைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேப்போல், மத்திய பட்ஜெட்டை குறிக்கும் விதமாக ஒடிசாவின் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எனும் கலைஞர் 4 டன் அளவிலான மணலைக் கொண்டு 'வெல்கம் யூனியன் பட்ஜெட்' எனும் வாக்கியங்களுடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, அடுத்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
