வறுமையை ஒழிக்க நிதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அணுகல் அவசியம்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்!

 
பட்ஜெட் மோடி  மத்திய அரசு நிர்மலா

 

வறுமையை முழுமையாக ஒழிக்கவும், வறுமையில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் அந்த நிலைக்குச் செல்லாமல் தடுக்கவும் நிதி, சந்தைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பரந்த அணுகல் அவசியம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Wider access to finance, digital economy needed to ensure poverty eradication: Finance Minister Nirmala Sitharaman – Jammu Links News

2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 59 கோடிக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா திட்டத்தின் கீழ் 60 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Garibi is not merely a shortage of income': Sitharaman says digital economy needed for poverty eradication - CNBC TV18

முத்ரா திட்டக் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், பிஎம் ஸ்வநிதி மற்றும் பிஎம் விஸ்வகர்மா திட்டங்கள் தெருவோர வியாபாரிகள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களுக்குப் பக்கபலமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2047-க்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் இலக்கில், அடித்தட்டு மக்களை மேலும் உயர்த்தவும் வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்