வெள்ளை நிற கைத்தறி பட்டுப்புடவை அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

இன்று பிப்ரவரி 1 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை 8வது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிர்மலா சீதாராமன் பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்தினாலான பட்டுச் சேலையை அணிந்து வந்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் எவ்வளவு கவனிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நிர்மலா சீதாராமன் உடுத்தும் ஆடையும் கவனிக்கப்பட்டு வருகிறது. 2019ல் இளஞ்சிவப்பு மற்றும் மங்களகிரி சேலையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2020ல் மஞ்சள் மற்றும் தங்க பட்டினாலான சேலை அணிந்திருந்தார். தங்க நிறம் எப்போதும் செழிப்பை அடையாளப்படுத்தும்.
2021 ல் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பட்டு போச்சம்பள்ளி சேலை அணிந்து வந்தார். 2022 ல் ஒடிசாவின் பொம்காய் சேலையை அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023ல் சிவப்பு நிற சேலையையும், 2024ல் நீலம் மற்றும் கிரீம் நிற சேலையை அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை வெள்ளை நிற கைத்தறிப் பட்டுப்புடவை அணிந்து வந்து தாக்கல் செய்ய உள்ளார். அதன் பார்டர் தங்க நிறத்தில் அமைந்துள்ளது. அதில் மீனை கருப்பொருளாக கொண்டு எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுபானி கலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சேலையை நிர்மலா சீதாராமன் உடுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டுப்புடவை பத்ம விருது பெற்ற துலாரி தேவியால் பீகாரின் மிதிலா பகுதியில் உள்ள பாரம்பரியமான நாட்டுப்புற கலை வடிவமாக அமைந்துள்ளது. வழக்கமாக வெள்ளை நிறம் என்பது வளர்ச்சியை, அமைதியை, மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும். இதனால் இந்தியாவில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!