பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் ஆரம்பித்ததுமே அமளி.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

 
பட்ஜெட்

இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 - 26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், அவர் பட்ஜெட் உரையை துவங்கியதுமே, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்ததால் அவையில் இருந்து எதிர்கட்சியினர்  வெளிநடப்பு செய்தனர்.

2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர். கடும் அமளிக்கு நடுவே பட்ஜெட் உரையை நிர்மலா வாசிக்கத் தொடங்கியுள்ளார்.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web