என்எல்சி முற்றுகை போராட்டம்... கலவரம் கைது அச்சத்தில் காவல்துறை !!

 
அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்கள் உணர்வுகளை யும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்கா மல் என்எல்சி நிறுவனத்துக்காக விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் 2வது நாளாக கடலுார் மாவட்ட நிர்வா கம் ஈடுபட்டிருக்கிறது.அதிகாரம் கையில் இருக்கிறது. அடக்கு முறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்றதுணிச்சலில் இதுபோன்ற மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக் கத்தக்கது.எத்தகைய அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும், வேளண் விளைநிலங்கள் கையகப் படுத்தப்படுவதை பாமக அனுமதிக்காது. என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப் பாட்டில்இருந்து போதும் பின்வாங்காது.

என்.எல்சி

அதன் ஒரு கட்டமாக,என்எல்சிக்காக விளை நிலங்கள் கையகப்படுத்து வதை தமிழக அரசு உடன டியாக கைவிட வேண்டும்.என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில், 28ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு என்எல்சி நிறுவன முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு நானே ஒரு தலைமையேற்கிறேன்.

என்எல்சி

இவ்வாறு அன்புமணி கூறியிருந்தார் அதன்படி இன்று என்.எல.சிக்கு வர காவல்துறை தடுக்க கலவரமாக வெடித்து தற்போது அன்புமணிகைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் 12க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மண்டை உடைந்து உள்ளது. வஜ்ரா வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் கலவர பூமியாக காட்சியளிக்கிறது நெய்வேலி... காவல்துறைத்தலைவர் சங்கர் ஜூவால் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து புறப்பட்டிருக்கிறார். எல்லாம் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் படுத்தும் பாடு வேறு என்ன சொல்ல

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web