பாஜகவுடன் கூட்டணி கிடையாது... எடப்பாடி திட்டவட்டம்!

 
எடப்பாடி

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல்   நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன்  தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டு  வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக   சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில்  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன்படி பாஜகவுன் இனி கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனை , முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உட்பட  முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனக்   கூறி வருகின்றனர்.

எடப்பாடி  மோடி
இத்தகைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா   தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்  ’ எனத் தெரிவித்திருந்தார்.

மோடி

இந்நிலையில் கிருஷ்ணகிரியில்  எடப்பாடி பழனிசாமி  , “பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி இருக்கிறதா  என்ற கேள்வியே தவறு.  பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம்.  2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டு விட்டது.
 கடந்த 5 மாத காலமாக மற்ற கட்சியினர் திட்டமிட்டு ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தவறான செய்திகள் வெளிவருகின்றன.  தற்போது இன்னும்  உறுதியாக சொல்கிறோம் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இல்லை, இல்லை ”எனத் தெரிவித்தார்

From around the web