தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை இல்லை - உயர் நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்!

 
சேவல்

தமிழ்நாட்டில் சேவல் சண்டைகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அதனை முறைப்படுத்த மட்டுமே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை இயக்குநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விலங்குகள் துன்புறுத்தப்படாமலும், சூதாட்டம் இன்றியும் நிபந்தனைகளின்படி நடத்தப்படும் போட்டிகளுக்கான டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

காவல்துறை அதிரடி! சேவல் சண்டையால் 8 பேர் கைது!

 நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சேவல் சண்டையை முறைப்படுத்தச் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும், சேவல் சண்டைக்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் டி.ஜி.பி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சேவல் சண்டை

டி.ஜி.பி.யின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்தச் சுற்றறிக்கை குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் சேவல் சண்டைக்குத் தடை இல்லாததால், மனுதாரர் உரிய பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்காகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிட்டார்.