ப்ளீஸ்... யாரும் எனக்கு பேனர் வைக்காதீங்க... துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

 
உதயநிதி ஸ்டாலின்


 
தமிழ்நாட்டின்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவம்பர் 27ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு பேனர் வைக்கவோ, பட்டாசு வெடிக்கவோ வேண்டாம் என உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

அன்றைக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து துணை முதல்வர்  உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், ”  நவம்பர் 27ம் தேதி என் பிறந்தநாள் வருவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்.
குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கழகத்துக்கு நூறு இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தாருங்கள்’ என கழகத்தலைவர் அவர்கள் கழக இளைஞர் அணிக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும்விதமாக, நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறியும்போது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.  

உதயநிதி

என் பிறந்தநாள் வருவதையொட்டி, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது நாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். 2026ல் வெற்றிபெற்று ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்” என பதிவிட்டுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!