ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!

 
ரிசர்வ் வங்கி கவர்னர்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான 'ரெப்போ வட்டி விகிதம்' மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால், பொதுமக்கள் வாங்கியுள்ள வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையில் எந்தவித உயர்வும் இருக்காது.

ரிசர்வ் வங்கி

2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதக் கணிப்பு, முன்னர் கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரான பாதையில் பயணிப்பதாலும், பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.