பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது !! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
சிறுவன் க்ரைம் பலாத்காரம் பாலியல்

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் நேற்று இரவு சட்டம் ஒழுங்கு குறித்த  மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய   முதல்வர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் காவல் துறை கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும். ​​பெண்கள் குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே முதல்பணியாக கடைப்பிடிக்கப்படும்.

அசோக் கெலாட்

காவல்துறையினர்  பாலியல் குற்றவாளிகளின் பதிவேடுகளைப் பராமரித்து  குணநலச் சான்றிதழில் அவர்களின் குற்றத்தைக் குறிப்பிட வேண்டும்.இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  வேலைக்கு விண்ணப்பித்தால்  அவர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அசோக் கெலாட்

அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ஏற்கனவெ அரசுப்பணிகளில் இருப்பவர்கள் இத்தகைய குற்றங்களை புரிந்தால் அவர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web