கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 
காதல் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தம்பதி விவாகரத்து

திருமணத்தைத் தாண்டிய சட்டவிரோத உறவில் (Adultery) இருக்கும் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் (Interim Maintenance) வழங்க மறுக்க சட்டப்பூர்வமாக இடம் உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் ஈடுபடுவதற்கான வலுவான ஆதாரங்களை முதற்கட்ட விசாரணையிலேயே கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், அவருக்கு இடைக்காலப் பராமரிப்புத் தொகை வழங்குவதைத் தவிர்க்க முடியும்.

விவாகரத்து

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125(4)-ன் கீழ், கணவனைத் தவிர்த்து வேறு ஒருவருடன் முறையற்ற உறவில் வாழும் மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியற்றவர் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், தொடக்கத்திலேயே இத்தகைய ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதை உடனடியாக மறுக்கலாம் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பணிச்சுமை - விவாகரத்து

தவறான உறவில் இருக்கும் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவது கணவருக்குச் செய்யப்படும் நிதிச் சுமை மற்றும் அநீதியாகும் என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இத்தீர்ப்பின் மூலம் அத்தகைய வழக்குகளில் கணவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.