இனி 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 'ஃபெயில்' கிடையாது - பீகார் அரசு அதிரடி!

 
பீகார்

பள்ளிக் கல்வி பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் மனநிலையைக் காக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையிலும் பீகார் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் இனி 'ஃபெயில்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'திறன் மேம்பாட்டு பயிற்சிக்குத் தகுதியானவர்' என்று குறிப்பிடப்படும் என மாநிலக் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு ரிசல்ட்

இதன் மூலம் கல்வியில் பின்தங்கும் மாணவர்கள் மனமுடைந்து போகாமல், பல்வேறு தொழிற்பயிற்சிப் படிப்புகளைத் தொடர்ந்து பயின்று தங்களது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதற்கிடையே, துணைத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.