கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை! சிபிஎஸ்இ அதிரடி!

 
கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை! சிபிஎஸ்இ அதிரடி!


இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலையில் இந்தியா முழுவதும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து உறவினர்கள், காப்பகங்கள், உதவும் இல்லங்களில் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனியார் சேவை நிறுவனங்களும் உதவி வருகின்றன.

கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை! சிபிஎஸ்இ அதிரடி!

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ படிக்கும் மாணவர்களில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளா் விடுத்த செய்திக்குறிப்பில் இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை! சிபிஎஸ்இ அதிரடி!

இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்2 பொதுத் தோவுகளை எழுத இருக்கும் பெற்றோரை இழந்த மாணவா்கள் அவா்கள் பதிவு கட்டணமோ, தேர்வுக் கட்டணமோ செலுத்த தேவையில்லை.
இதற்கு முன் பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவா்களின் தகவல்கள் சமா்ப்பிக்கப்படும் போது பெற்றோரை இழந்த மாணவா்களின் தகவல்களை பள்ளிகள் ஆராய்ந்து வழங்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web