புதிய ரேஷன் கார்டும், கேஸ் இணைப்பும் இல்லை... தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்!

 
ரேஷன் கார்டு சிலிண்டர்

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோகத் தடையால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, புதிய ரேஷன் கார்டு மற்றும் கேஸ் இணைப்பு பெறுவதிலும் கடுமையான சிக்கல் நீடித்து வருகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

சிலிண்டர்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, குறைந்தது 25 நாட்களுக்குப் பிறகே மீண்டும் அடுத்த சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்து புதிய கேஸ் இணைப்புகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், புதிய எரிவாயு இணைப்பு கோரி காத்திருப்போர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சிலிண்டர் மானியம்

புதிய ரேஷன் கார்டு பெற கேஸ் பில் அல்லது எரிவாயு இணைப்பு ஆவணம் அவசியமாக உள்ளதால், கேஸ் இணைப்பு கிடைக்காத காரணத்தால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களும் முடங்கியுள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்தச் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் படும் அவதியைக் போக்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.