"யாருக்கும் ஆதரவு கிடையாது!"... திமுக - அதிமுக கூட்டணிப் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி!

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக-வின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று பாஜக-வின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான போஜராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி இதுவரை எந்தக் கட்சியும் எங்களை அணுகவில்லை. அதேபோல், நாங்களாகவும் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவது இல்லை." தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக நடுநிலை வகிக்கும் என்பதையும், ஆட்சி அமைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் முட்டுக் கொடுக்காது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தென்மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்...  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!  

முன்னதாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், அதற்குப் பாஜக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்த யூகங்களுக்குப் பதிலளித்த நயினார், அத்தகைய தகவல்களில் உண்மையில்லை என்றும், பாஜக-வின் ஆதரவு யாருக்கும் கிடையாது என்றும் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமைய பாஜக விரும்புவதாக விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தத் தகவல் தமிழக அரசியல் களத்தில் மேலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.