"யாரும் ஓடிவிடக்கூடாது; திங்கட்கிழமை சம்பவம் இருக்கு" - முதல்வர் விஜய்க்கு உதயநிதி சவால்!

 
உதயநிதிவிஜய் உதயநிதி

சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதமும் சவாலும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் 8 உரைகளும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 37 உரைகளும் ஆற்றியுள்ளனர்.

உதயநிதிவிஜய்

பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் வரும் திங்கட்கிழமை விரிவான பதிலளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், தான் அவையில் இல்லாத நேரத்திலும் அங்கு எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளையும் கவனிப்பதாகவும், தான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது என்றும் சவால் விடுத்தார்.

முதல்வரின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், 3 நாட்கள் கழித்து வந்து பதில் பேசுங்கள் என்று தான் முன்பே கோரியதாகவும், இந்த அறிவிப்பை முதல்வர் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால் இந்தச் சிக்கலே வந்திருக்காது என்றும் கூறினார்.