"விஜய்யை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை.." - தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் சூறாவளி பிரச்சாரம்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தைச் சிறப்பாக வழிநடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின்தடை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சிப்பவர்கள், கர்நாடகாவில் ஏழரை மணி நேரமும், ஆந்திராவில் 8 மணி நேரமும் மின்தடை ஏற்படுவதை கவனிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

அதிமுகவிலிருந்து தவெகவில் இணைவதற்கு மேலும் 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாகவும், இதன் பின்னர் தவெகவின் பலம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்களில் தவெக அமோக வெற்றி பெறும் என்றும், தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் பண மோசடிகளுக்கு இடமில்லை என்பதால் பொதுமக்கள் மத்தியில் எந்தவிதமான பண நெருக்கடியும் இருக்காது எனவும் அவர் கூறினார்.
ஓராண்டு காலத்திற்குப் பிறகு இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தை முதலமைச்சர் விஜய் வழிநடத்துவார் என்றும், அவரை வீழ்த்துவதற்குத் தமிழ் மண்ணில் எவரும் பிறக்கவில்லை என்ற வரலாற்றை தவெக படைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
