துணை கிடைக்கவில்லை.. 10 லட்சம் ரூபாய் செலவில் தன்னையே திருமணம் செய்த வினோத பெண்..!

 
தன்னை தானே திருமணம் செய்த பெண்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்மணியின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் சாரா வில்கின்சன் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.  42 வயதாகும் சாரா வில்கின்சன், தன்னுடைய திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பணத்தை சேகரித்து வந்தார்.இதுவரை இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் சேமித்து வைத்துள்ளார் சாரா.

தன்னுடைய 40வது பிறந்த நாளில் தனக்கான துணையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது 42 வயதாகும் சாரா இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இதற்காக 20 ஆண்டுகளாக சேமித்து வைத்த 10 லட்ச ரூபாயை செலவழித்துள்ளார்.

Woman Spends 20 Years Saving for Wedding, Marries Herself After Failing to  Meet Mr Right - Briefly.co.za

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரம்மாண்டமாக தனது திருமண விழாவைக் கொண்டாடி உள்ளார் சாரா. ஹார்வெஸ்ட் ஹவுஸில் திருமண விழா நடைபெற்றது. அதில் மணப்பெண்ணுக்கான பிரத்யேக வெள்ளை கவுன், வைர மோதிரம், மூன்று அடுக்கு திருமண கேக், பெண் தோழிகளுக்கென்று தனி உடை என பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

From around the web