தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்... தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!
விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று வரும் நவம்பர் 13-ஆம் தேதியுடன் 6 மாதங்களை நிறைவு செய்யவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அரசைக் கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடும் என்ற ஊகங்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி செய்ய 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக வசம் 109 எம்.எல்.ஏ-க்களும், கூட்டணிக் கட்சிகள் வசம் 13 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக்குள் கம்யூனிஸ்ட் கட்சிகள் சில கொள்கை ரீதியான விவகாரங்களில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசிற்கான ஆதரவு நிலைத்தன்மையில் கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையையும் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாமகவுடன் தவெக தலைமை மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. 6 மாதங்கள் முடிவடையும் தருவாயில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகளாலும் தவெகவின் கூட்டணி உத்திகளாலும் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
